tamilnadu

img

ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை

இந்திய பொருளாதாரத்தில் நிலவி வரும் கடுமையான மந்த நிலையால் இந்த முறையும் வட்டி குறைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கும் நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி விகிதம் 4.5 சதவிகிதமாக படு வீழ்ச்சி கண்டது. இதனால் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதுவரை 5 முறை வட்டி விகிதத்தினை 135 அடிப்படை புள்ளிகளை குறைத்திருந்த நிலையில், இந்த முறையும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்தா தாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக வட்டி குறைப்பு செய்யப்படாமல், 5.15 விகிதமாகவே உள்ளது.